மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை – ராகுல் காந்தி
In இந்தியா February 22, 2021 11:20 am GMT 0 Comments 1135 by : Krushnamoorthy Dushanthini

இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கவும் கட்டுப்படுத்தவும் வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் மத்திய அரசால் விவசாயிகளின் வலியை புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர். ஆனால் இந்திய அரசு அக்கறை காட்டவில்லை.
தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கட்டாயப்படுத்தப்படாவிட்டால் இந்த 3 புதிய சட்டங்களை அவர்கள் திரும்பப் பெறப்போவதில்லை. இந்த 3 சட்டங்கள் இந்தியாவில் விவசாய முறையை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரத மாதாவுக்கு சொந்தமான ஒரே தொழில் விவசாயம். மற்ற ஒவ்வொரு வணிகமும் மற்றவர்களுக்கு சொந்தமானது. ஒரு சிலர் விவசாயத்தை சொந்தமாக்க விரும்புகிறார்கள்.
அரசாங்கத்தில் உள்ள இரண்டு பேர் அரசாங்கத்திற்கு வெளியே இரண்டு நபர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.