மத்திய பிரதேசத்தில் 2 பெண் பயங்கரவாதிகள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்
In இந்தியா December 12, 2020 10:21 am GMT 0 Comments 1383 by : Yuganthini

மத்திய பிரதேசத்தில் நக்சல் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடத்திய தாக்குதலில் 2 பெண் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்திலுள்ள போர்வன் காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கிர்னாபூர் சரக பொலிஸ்துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு பொலிஸார் இணைந்து குறித்த பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. அதிகாலை 12.30மணியளவில் ஒரு பயங்கரவாதி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்தும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. அதில் இன்னொரு பயங்கரவாதியையும் பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இருவரும் பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றிய பொலிஸார் குறித்த பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.