மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும்
In இந்தியா February 7, 2021 3:22 am GMT 0 Comments 1275 by : Jeyachandran Vithushan

மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும் என்பதால், அவற்றை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மாநில மனித உரிமை ஆணைய உத்தரவுகளை எதிர்த்து அதிகாரிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது மனித உரிமை ஆணைக்குழுவின்பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால், ஆணைக்குழுவின் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எக்காரணத்தை கொண்டும் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம், எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.