மன்னாரில் இருந்து தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயம்!
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் இருந்து கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த மூவரும் கடற்றொழிலுக்குச் சென்தாக இன்று (செவ்வாய்க்கிழமை) அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களின் உறவினர்களால், மன்னார் பொலிஸ், மாவட்ட அரசாங்க அதிபர், கடற்தொழில் திணைக்களம் மற்றும் கடற்படை ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள், தூண்டில் மூலம் மீன் பிடிக்கப் படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் கொண்ணையன் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கொட்வின் (வயது-38), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்.கண்ணன் (வயது-55) மற்றும் எஸ்.பாண்டியன் (வயது-23) ஆகிய மூன்று மீனவர்களே இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடற்படையினர் கடலில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.