மன்னாரில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்
In இலங்கை January 30, 2021 5:51 am GMT 0 Comments 1393 by : Yuganthini
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (சனிக்கிழமை) காலை 8.45 மணியளவில் சுகாதார துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது.
முதலாவது கொவிட்-19 தடுப்பூசியை மன்னார் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.கே.வின்சனுக்கு செலுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோருக்கு செலுத்தியுள்ளனர். பின்னர் சுகாதார துறையிருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதேவேளை மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் சுகாதார துறையினருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் 2ஆம் கட்டமாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள், 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.