மன்னாரில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
மன்னார் சாந்திபுரம் புகையிரத கடவைக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான பொதியிலிருந்து சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சந்தேகத்திற்கு இடமான பொதிகள் காணப்பட்டன.
குறித்த காட்டுப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பொதிகளை சோதனையிட்டனர்.
இதன்போது அப்பொதிகளில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட சி-4 வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர
-
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்
-
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்
-
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி ப
-
ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும
-
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்த
-
கனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாத
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே ஒரு
-
யாழ்.நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போட
-
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி