மன்னாரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எதிராக நடவடிக்கை
In இலங்கை January 16, 2021 10:59 am GMT 0 Comments 1421 by : Yuganthini

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இன்று (சனிக்கிழமை) காலை,பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
எனவே மக்களை உரிய சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக மன்னார் பொலிஸார் மேற்படி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக முகக்கவசம் அணியாத வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கை கழுவுவதற்கு ஒழுங்கான ஏற்பாடு மேற்கொள்ளாத வர்த்த நிலையங்கள் ஆகியவற்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் ஒரு சில வர்த்தகர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
அதேநேரத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசங்களை சரியான முறையில் அணியாமல் நடமாடும் பொது மக்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.