மன்னார் மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாத நிலையில் விவசாயிகள்!
In இலங்கை February 22, 2021 9:30 am GMT 0 Comments 1178 by : Vithushagan

மன்னாரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முசலி , நானாட்டான் , மாந்தை மேற்கு , மடு போன்ற பிரதேசங்களில் பெருமளவில் விவசாயிகள் பாதீப்படைந்துள்ளனர்.
தற்போது அறுவடை காலம் ஆரம்பித்து உள்ளதினால் மழை காரணமாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ள போதும், அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக விவசாயிகள் அறுவடை செய்த தமது நெல்லை காய வைக்க உரிய ‘தளம்’ இல்லாத நிலையில் வீதிகளில் நெல்லை காய வைக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகி உள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்துள்ளது.
இதனால் மன்னார் மாவட்ட விவசாயிகள் தமது நெல்லை காய வைத்து விற்பனை செய்ய பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.