மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் பிரதமர் கலந்து கொண்டார்!
In இலங்கை November 9, 2020 4:54 am GMT 0 Comments 1407 by : Vithushagan

வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கலந்து கொண்டார்.
வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தலைமை பூசகரான சிவஸ்ரீ உதயராகவக் குருக்களினால் இந்த ஆசீர்வாத பூஜை நடத்தப்பட்டது. நிகழ்வில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.
இதன்போது கொரோனா தொற்று நிலைமையிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு கௌரவ பிரதமரின் குடும்பத்தினர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ‘கடவர’ ஆலயத்திலும் பிரதமர் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.