மருத்துவ துறையில் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருவதாக அமைச்சர் விஷ்வாஸ் சாரங் பாராட்டு
In இந்தியா December 6, 2020 2:49 am GMT 0 Comments 1413 by : Yuganthini

கொரோனா காலத்திலும் மருத்துவ துறையில் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருகிறது என மத்திய பிரதேச மருத்துவ கல்வித்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் கூறினார்.
சென்னை- தேனாம்பேட்டையில் ‘108’ மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளை மத்திய பிரதேச மருத்துவ கல்வித்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் இணைந்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது, “புயல் நடவடிக்கையாக 8456 மருத்துவ முகாம்கள் மற்றும் 435 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நீரேற்ற நிலையங்களிலும் ‘குளோரின்’ கலப்பு முழுமையாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் கூறியுள்ளதாவது, “கொரோனா காலத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருவது பாராட்டுக்குரியது.
மருத்துவ கல்வியில் தமிழகம் சிறப்பாக செயற்படுகிறது. எனவே மருத்துவ கல்வியில் தமிழகத்துடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம். இதற்காக தமிழக முதல்வரையும் சந்திக்க உள்ளேன்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.