மலையாள பிக்பொஸ் போட்டி குறித்த அறிமுகம்!
In சினிமா February 9, 2021 12:06 pm GMT 0 Comments 1145 by : Krushnamoorthy Dushanthini

மலையாள பிக்பொஸ் பெப்ரவரி 14 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்த ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு இரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாட்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி.
இந்நிலையில் மலையாள பிக் பாஸ் 3-ம் பருவத்தின் நிகழ்ச்சி வரும் பெப்ரவரி 14 முதல் தொடங்கவுள்ளது. இந்தமுறையும் மோகன்லால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்காக சென்னை ஏவிபி ஃபிலிம் சிட்டியில் பிக்பொஸ் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.