மஹா விஷ்ணுவின் அவதாரங்கள் உணர்த்தும் தத்துவங்கள்!
In ஆன்மீகம் April 1, 2019 9:21 am GMT 0 Comments 3279 by : Krushnamoorthy Dushanthini
எப்படியெல்லாம் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல இப்படித்தான் வாழ வேண்டும் என்பதே வாழ்க்கை. இதனை வேதங்களும் புராணங்களும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இவற்றில் மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் மனித வாழ்க்கை நெறிமுறையை சீர்படுத்துவதில் பாரிய பங்களிப்பு செய்கின்றது. அந்த அவதாரங்கள் உணர்த்தும் வாழ்க்கை நெறிமுறைகளை சுருக்கமாக பார்க்கலாம்
மச்ச அவதாரம்: தாயின் வயிற்றில் இருந்து ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
கூர்ம அவதாரம்: மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
வராக அவதாரம்: ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
நரசிம்ம அவதாரம்: எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம்.
வாமண அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
பரசுராம அவதாரம்: வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
இராம அவதாரம் : திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
பலராம அவதாரம்: இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
கிருஷ்ண அவதாரம்: முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
கல்கி அவதாரம்: இறைநிலையில் கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாய் முக்தி பெறுவது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.