மஹிந்தவின் ஆட்சியை தவிர்க்கவே கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது: சார்ள்ஸ் நிர்மலநாதன்
In இலங்கை April 8, 2019 9:59 am GMT 0 Comments 2399 by : Yuganthini
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாதென்பதற்காகவே வரவு- செலவு திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது
“எங்களது மக்களுக்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனாலும் சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே நாம் எமது நகர்வுகளை மேற்கொள்கின்றோம்.
இதேவேளை வரவு- செலவு திட்டத்தினை தோற்கடித்தால் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென மஹிந்த தரப்பினர் தெற்கு பகுதியில் கூறி வந்தனர்.
மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சதிப்புரட்சியை தோற்கடித்து நியாயத்தை நிலைநாட்டினோம். அதனை அனைவரும் வரவேற்றார்கள். ஆனால் தற்போது வரவு- செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்கியமையை தவறென விமர்சிக்கின்றனர்.
அன்று சதிப்புரட்சியை தோற்கடிக்க கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது சரியென்றால் வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்கியமையும் சரி என்பதே எங்களின் நிலைப்பாடு” என சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடையாது என தமிழக பா.ஜ.க.தலைவர் எல்.முருகன் தெரிவித
-
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லைச் சுவர் கட்டுமான பணிகள் ஜ
-
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்கு பெறவேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவ
-
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை (திங்கட்கிழமை) மு
-
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல்
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு கொரோ
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ