மஹிந்த ஆட்சியில் கதைப்பதற்குக் கூட சுதந்திரம் இருக்கவில்லை – ஸ்ரீநேசன்

கடந்த கால மஹிந்த ஆட்சியில் கதைப்பதற்குக் கூட சுதந்திரம் இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் சாதாரண தரத்தில் சிறப்பு சித்தி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார்கள். பேசுவதற்கு சுதந்திரம் இல்லை. கதைப்பதற்கு சுதந்திரம் இருக்கவில்லை. நடமாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத நிலைமை காணப்பட்டது. ஆனால் இன்று ஓரளவு சுதந்திரம் இருக்கின்றது. அபிவிருத்திகளை ஓரளவு செய்யக்கூடிய நிலையிருக்கின்றது.
கடந்த கால ஆட்சியை விட முன்னேற்றமான நிலையிருக்கின்றது. இருக்கின்ற ஆட்சியாளர்களில் ஓரளவு நல்ல விடயங்களை இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். அதற்காகவே வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம். வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக 500கோடி ரூபாயினை ஒதுக்கியுள்ளார்கள்.
கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனூடாக வாழைச்சேனை காகித ஆலை உட்பட பல தொழிற்சாலைகளை புனரமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.