மாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன

எல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை விரைவாக நடத்த ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தீர்மானித்தால் மாத்திரமே தேர்தலை விரைவாக நடத்த முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “உரிய காலத்துக்கு முன்பாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது.
அவ்வாறு ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருவதற்கு முன்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே உள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தலும் மிக விரைவாக நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்தே எமது எதிர்பார்ப்பாகவும் உள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்த
-
கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் அறுவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் தொட
-
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செ
-
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கூடவ
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர