மாகாண சபை முறைமை நாட்டுக்கு மிகவும் அவசியமானது – ரோஹித
In இலங்கை December 15, 2020 9:54 am GMT 0 Comments 1404 by : Jeyachandran Vithushan

மாகாண சபை முறைமை நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை கடந்த அரசாங்கத்தில் அரசியல் நோக்கங்களுக்காக பலவீனப்படுத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்று மாகாண சபை முறைமையை பலப்படுத்தும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.