மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதாதைகள் ஒட்டுபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
In இலங்கை October 2, 2019 3:28 am GMT 0 Comments 1595 by : Dhackshala
மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகரசபையின் அனுமதியின்றி ஒட்டப்படும் அல்லது கட்டப்படும் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்படுமென மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
அத்தோடு அதனை ஒட்டும் அமைப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தம் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாநகரத்தின் அழகுபடுத்தல் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில பல அமைப்புக்களால் குறிப்பாக தனியார் நிறுவனங்கள், தனியார் வகுப்புகள், திரையரங்குகள், மதப்பிரச்சார குழுக்கள் போன்றவர்களால் விநியோகிக்கப்படுகின்ற சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற தற்போதைய சூழலில் இவ்வாறாக சட்டவிரோதமாக மாநகரசபையின் அனுமதியின்றி கட்டப்படுகின்ற பதாதைகள், ஒட்டப்படுகின்ற சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்படுவதோடு அந்த அமைப்புகளிற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மாநகரசபை தள்ளப்படும்” என மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்