மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது
In ஆசிரியர் தெரிவு April 15, 2019 7:06 am GMT 0 Comments 2712 by : Yuganthini
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மானிப்பாய், உடுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களையே பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்துள்ளனர்.
குறித்த பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் மானிப்பாய் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
-
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப
-
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்
-
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க
-
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந
-
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர
-
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந
-
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள
-
கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை 5 நாட்களுக்கு போக்குவ
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழ