மானிப்பாயில் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் – இரு இளைஞர்கள் கைது!

மானிப்பாய் பகுதியிலுள்ள மூன்று வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரண்டு பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆனைக்கோட்டை பிடாரி அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்றிலிருந்து இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கோடரி மற்றும் வாள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியிலுள்ள இரண்டு வீடுகள் உட்பட மூன்று வீடுகளுக்குள் நேற்று (புதன்கிழமை) புகுந்த 9 பேர் கொண்ட கும்பல் அடாவடியில் ஈடுபட்டிருந்தது. இந்த தாக்குதல்களை ஆவா குழுவின் நடத்தினர் என்று பொலிஸார் கூறியிருந்தனர்.
இதனிடையே, இச்சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களில் கொக்குவில் பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ