மாபெரும் திரைக்காவியமாகும் தாய்லாந்து குகையின் திகில் அனுபவங்கள்
July 22, 2018 7:15 am GMT
உலகம் உதைபந்தாட்ட போட்டிகளில் மூழ்கித்திளைத்திருந்த அதேவேளை இன்னொரு முனையில் உதைபந்தாட்ட ஆர்வ இளம் சிறுவர்கள் அணியும் அதன் பயிற்சியாளரும் தாய்லாந்தின் ‘தி தம் லுஅங்’ என அழைக்கப்படும் ஆபத்தான குகைத்தொடரில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
சாகசப்பயணம் சென்ற இவர்கள் திடீரென காணமல் போனதும் குகையில் சிக்கியமை கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்களை மீட்டெடுக்க வகுக்கப்பட்ட திட்டங்கள் அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக மீட்டுக் கொண்ட போது ஏற்பட்ட திகில் அனுபவங்கள் அனைத்தும் பெரும் செலவில் திரைப்படமாக தயாராக இருக்கிறது.
தாய்லாந்தின் மிகவும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள இந்த குகையிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் மீட்புக் குழு வீரர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், திட்டமிடப்பட்ட வரைபடங்கள் ஆகியவற்றை கொண்டு இதனை அருங்காட்சியகமாக மாற்றப்போவதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
தாய்லாந்து என்றதும் குகையில் சிக்கிய சிறுவர்களும், அவர்களை மீட்புதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகளுமே நினைவுக்கு வரும் வகையில் இந்த விவகாரம் உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான ஒடு;ங்கலான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் திகதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அதனுள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த துவிச்சக்கர வண்டிகள் அவதானிக்கப்பட்டு குகைக்குள் எவரும் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்பது ஊகிக்கப்பட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும் அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இவர்கள் குகைக்குள் சென்றிருந்த வேளையில் பெய்த பெருமழை காரணமாக குகைக்குள் பாய்ந்த காட்டு வெள்ளமும் குகையின் வெளியேறும் வாயில்களை அடைத்துக் கொண்டதால், இந்த 13 பேர் கொண்ட அணி, ஒதுங்குவதற்கு சற்று மேடான இடத்தைத் தேடி குகைக்குள் மேலும் பின்னோக்கி நகர நேரிட்டது.
வெள்ளம் சூழ்ந்த….., ஆழமான……., சிக்கலான பாதைகளை கொண்ட போதிய வெளிச்சமும் காற்றோட்டமும், உடைய அந்தக் குகையில் சிக்கிக் கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பதற்கு இதுவே சவாலாகவும் இருந்தது.
உலக விவகாரமாகி சர்வதேசக் கவனத்தை இந்த விடயம் பெறவும் செய்மதி உதவியுடனான அதி நவீன தொழில் நுட்பமும் ஆலாசனைகளும் தாய்லாந்துக்கு கிட்டின.
பிரித்தானியாவின் குகை மீட்பு வல்லுநர்கள் உட்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுழியோடும் வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.
பத்து நாட்களாக தொடர்ந்த தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் ஜூலை 2-ம் திகதி சிறுவர்களும் அவர்களின் பயிற்சியாளரும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்தனர்.
ஒரு மலையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்தக் குகையில் மலை உச்சியில் இருந்து 800 மீற்றர் ஆழத்தில் இவர்கள் அகப்பட்டிருந்தனர். பத்து நாட்களாக உணவின்றி தவித்த இவர்களுக்கு உயிர் வாழ்வுக்கு அவசியமான பிராணவாயு (ஒக்சிஜன்) பற்றாக்குறையும் இருந்தது.
சாதாரனமாக சுவாசிக்கும் காற்றில் 21 சதவீத ஒக்சிஜன் இருக்க வேண்டிய நிலையில் குகைக்குள் 15 சதவீதமாக ஒக்சிஜனின் அளவு வீழ்ந்திருந்தது.
ஒக்சிஜன் விநியோகிப்பதும் உணவு குடி நீர் வழங்குவதும் அவசியமாக இருந்ததுடன் குகை வாயிலை வெள்ளம் சூழ்ந்திருந்தால் இவர்களை மீட்டெடுக்கும் பணியும் மிகவும் கடினமாக உணரப்பட்டது.
இவர்கள் அனைவரும் சுழியோடக் கற்றுக் கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்க வேண்டும் அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்க வேண்டும் என்றே முதலில் அஞ்சப்பட்டது. எனவே அவர்களை மீட்கும் பணி இலகுவாக எளிதாகவோ இருக்கப் போவதில்லை என்பதை உலகம் புரிந்து கொண்டது.
உடனடியாகவே இவர்களுக்கு உணவு, மருந்து, ஒக்சிஜன் போன்றவற்றை விநியோகம் செய்யும் பணியும் குகையில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் நடடிவக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு முறை ஒரு வீரர் குகைக்குள் சென்று திரும்புவது மிகக் கடினமான, ஆபத்தான, பல மணி நேரம் பிடிக்கும் பயணமாக இருந்தது. குகையில்; சிக்கிக் கொண்டவர்களுக்கும் வெளி உலகத்துக்கும் இடையே தொடர்பாடல் ஏற்படுத்தப்பட்டு பரிமாறப்பட்ட கடிதங்களும் தகவல்களும் உலகை உணர்ச்;சி மேலிட வைத்தது.
தாய்லாந்து கடற்படையின் சுழியோடி வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஒக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஒக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் திகதி உயிரிழந்ததை தொடர்ந்து தாயலாந்து குகை மீட்பு விவகாரத்தின் மறக்கமுடியாத சோக நிகழ்வானது.
இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு மீட்பு குழு எதிர்கொள்ளும் ஆபத்துகளையும் இழப்புகளையும் எச்சரித்தது. பருவகால மழை காரணமாக காலம் தாழ்த்தினால் குகை மேலும் வெள்ளமயமாகும் என அஞ்சிய மீட்புக் குழு ஆபத்தான நடவடிக்கை என்ற போதிலும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு கவச உடை அணிவித்து சுழியோட வைத்து, மீட்பது என முடிவெடுத்தனர்.
குகையின் உட்பகுதி சில இடங்களில் 33 அடி உயரம் வரை இருந்தாலும், சில இடங்கள் மிகவும் குறுகலாக காணப்பட்டன. மீட்புப் பணியாளர்கள் தமக்கான ஒக்சிஜன் காற்று உருளையையோடு அதனை நீந்திக் கடந்தது பாதிக்கப்பட்டவர்களை நெருங்குவதே கடினமாக இருந்தது.
இந்த நிலையில் ஒவ்வொருவரையும் மீடகும் நடவடிக்கைகள் மிகவும் நிதானமாக திட்டமிடப்பட்டது.
இவ்வாறான கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளுவதில் போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத சிறுவர்களை ஒடுங்கலான………. வெள்ளம்…… சேறு….. சகதி நிறைந்த நீண்ட குகைப்பாதையூடாக அனைவரையும் அவதானமாக மீட்டெடுக்கும் பணியும் ஒவ்வொரு கட்டமும் திகிலும் தீரமும் கொண்தாகவே இருந்து உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.
ஏதிர்பாராத விதமாக ஆபத்தான குகையில் அகப்பட்டு 17 நாட்கள் திகில் கணங்களை கடந்து மீண்ட இவர்களது அனுபவங்களும் இவர்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கு அனைத்து ஆற்றலையும் பயன்படுத்திய அவசர மீட்புக்குழுவின் சாகசங்களும் சாதனைகளும் நிகழ்ந்த சோகங்களும் இன்னொரு டைட்டானிக் திரைக் காவியமாகலாம்.
-
அமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின் ஒக்டோபசா..?
-சாந்த நேசன்- முறிவடைந்து விட்ட அமெரிக்க அதிபர் டொ...
-
முதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட வீரர்கள்
உலகமெல்லாம் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட முதலாம் உலகப...