மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது!
In சினிமா December 28, 2020 9:54 am GMT 0 Comments 1236 by : Krushnamoorthy Dushanthini

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 13 ஆம் திகதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.