மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனை!
In சினிமா January 18, 2021 10:54 am GMT 0 Comments 1214 by : Krushnamoorthy Dushanthini

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளது.
இதன்படி கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டொலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது.
வார இறுதியில் மற்ற ஹொலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ‘எ லிட்டில் ரெட் பிளவர்’ என்கிற படம் 11.75 மில்லியன் டொலரை மட்டுமே வசூலித்துள்ளது.
திரையரங்குகள் திறக்கப்பட்ட பல வெளிநாடுகளிலும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.