மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு
In இலங்கை April 6, 2019 9:22 am GMT 0 Comments 2082 by : Dhackshala
ஊறுபொக்க பிரதேசத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த,ஆரியதாஸ சேனாநாயக்க (72 வயது) எனும் நபரே நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஊறுபொக்க, பட்டஹேன பிரதேசத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த நபர், அவரது மகனுடன் கருவா உரித்துக்கொண்டபோது மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அயலவர்வர்கள் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்தையடுத்து அங்குள்ள சில வீடுகளின் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் ஊறுபொக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்
-
ஆட்சியில் இருந்து வெளியேறும் இறுதிநாளிலும் டொனால்ட் ட்ரம்ப், தனக்கு நெருக்கமான 73 பேருக்கு பொது மன்ன
-
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக இரண்டு தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் பரிந்துரை
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் அபார
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 563பேர் பா
-
நாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத
-
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பூரண குணமடைந்து நேற்று
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்