மின்சார தேவையினை பூர்த்தி செய்ய மாற்று வழிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை
In ஆசிரியர் தெரிவு April 8, 2019 3:12 am GMT 0 Comments 2747 by : Yuganthini

நாட்டில் தொடர்ச்சியாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் மக்களின் மின்சார தேவையினை பூர்த்தி செய்வதற்காக மாற்று வழிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில், தினமும் மின்வெட்டை அமுல்படுத்துகின்றமையால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இவ்விடயம் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ரவி கருணாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மின்னுற்பத்தி முறையில் சிறந்த முகாமைத்துவம் இல்லாதமை காரணமாகவே சுழற்சி முறையில் மின் வெட்டினை அமுல்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் எதிர்வரும் புதன்கிழமையுடன் மின்வெட்டு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமென ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் தமிழ்- சிங்கள புத்தாண்டு மற்றும் வெசாக் கொண்டாட்டங்களின்போது மின்சார தேவைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தேவையான மின்சார வசதிகளை மக்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தி கொடுப்போமென அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.