மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை – அமைச்சரவை அனுமதி
In இலங்கை January 19, 2021 4:47 am GMT 0 Comments 1505 by : Dhackshala

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி தொடர்ந்து 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போருக்கே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறிப்பிட்ட காலப்பகுதி வரையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.