மீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங்
In இந்தியா November 27, 2020 10:10 am GMT 0 Comments 1407 by : Krushnamoorthy Dushanthini

மும்பையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைப் போல் மீண்டும் தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாட்டின் தன்மானம், இறையாண்மை, மண்டல ஒருமைப்பாடு ஆகியவற்றில் அரசு எந்த இணக்கமும் செய்துகொள்ளாது எனத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தின் எளிதான இலக்காக இந்தியா இருக்காது என்றும்இ பயங்கரவாதத்தின் நாற்றங்காலாகப் பாகிஸ்தான் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகத் தேசியப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்இ இதனால் மும்பை தாக்குதலைப் போன்று மற்றொரு தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை என்றும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.