முதலாம் உலகப்போரின் போது புறா மூலம் அனுப்பப்பட்ட கடிதம் கண்டுபிடிப்பு
In ஐரோப்பா November 9, 2020 5:05 am GMT 0 Comments 1892 by : Sukinthan Thevatharsan

ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும், கடிதத்தினை உள்ளடக்கிய மிகச் சிறிய கலன் ஒன்று பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பிரான்சில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஓர் ஜோடி குறித்த சிறிய குப்பி வடிவிலான கலனைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலனுக்குள் கடிதம் ஒன்று உள்ளிடப்பட்டுள்ள அதேவேளை, குறித்த கடிதம் 1910ம் ஆண்டு முதல் 1916ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் இக்கடிதம் ஓர் ராணுவ வீரனால் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இக்கடிதம் தாங்கிய கலன், புறாவினால் காவி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
முதலாம் உலகப் போரின் போது ஜேர்மனியில் தங்கியிருந்த ராணுவ வீரன் ஒருவரால் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டுள்ள குறித்த கடிதமானது, Dominique Jardy, curator of the Linge Museum at Orbey in eastern France என அவரது உயர் அதிகாரிக்கு விலாசமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 16 என திகதியிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு தெளிவாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அக்கடிதமானது, 1910 அல்லது 1916 ம் ஆண்டு எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.