முதல்முறையாக ஒலிம்பிக்கில் ‘பிரேக்டேன்சிங்’ ஒரு போட்டியாக சேர்ப்பு!
In விளையாட்டு December 8, 2020 6:32 am GMT 0 Comments 1554 by : Anojkiyan

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், ஹிப் ஹொப் அல்லது ராப் இசை சூழலில் தோன்றிய ஒரு ஆடல் வடிவமான ‘பிரேக்டேன்சிங்’ முதல் முறையாக ஒரு போட்டியாக சேர்க்கப்படவுள்ளது.
நடனம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பிரேக்டேன்சிங்கில் சிறந்து விளங்கும் போட்டியாளர்களில் 16 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் கலந்து கொள்வார்கள்.
இதனால் ஒலிம்பிக் போட்டியை காண அதிக அளவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுகிறது.
இதில் ஸ்கேட்போர்டிங், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் சர்பிங் ஆகிய போட்டிகளும் முதன்முறையாக நடத்தப்படும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.