முதல் டெஸ்டில் இலங்கை அணி தடுமாற்றம்: இங்கிலாந்து நிதான துடுப்பாட்டம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில் ஜோனி பேயர்ஸ்டொவ் 47 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் 66 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதற்கமைய இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 8 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
காலியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், டோமினிக் பெஸ் 5 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட் 3 விக்கெட்டுகளையும் ஜெக் லீச் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்போது ஸெக் க்ரெவ்லி 9 ஓட்டங்களுடனும் டோமினிக் சிப்ளி 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை இங்கிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.