முதல் போட்டியிலிருந்து விலகினார் வோர்னர்!
In உள்ளுா் விளையாட்டு December 9, 2020 8:17 am GMT 0 Comments 2018 by : Benitlas

அடிலெய்டில் இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாவுள்ள முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் விலகியுள்ளார்.
எனினும் வோர்னர் மெல்போர்னில் ஆரம்பாகும் இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
அவுஸ்ரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் ஒருநாள் தொடரை அவுஸ்ரேலிய அணியும் (2:1), இருபதுக்கு : 20 தொடரை இந்திய அணியும் (2:1) கைப்பற்றியுள்ளன.
இந் நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடுகையில் வோர்னர், பந்தை விழுந்து தடுத்த போதே உபாதைக்கு உள்ளாகி ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.
இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உபதை குணமடையாமையின் காரணமாக எஞ்சிய ஒரு ஒருநாள் போட்டியிலும், அடுத்த இருபதுக்கு : 20 தொடரிலும் வோர்னர் விளையாடவில்லை.
தற்போது சிட்னியில் சிகிச்சை பெற்று வரும் வோர்னர், அடுத்து வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகியிருப்பதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.