மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்தார் லசித் மலிங்க
In விளையாட்டு April 11, 2019 7:00 am GMT 0 Comments 2263 by : adminsrilanka
இலங்கையில் இடம்பெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வந்திருந்த லசித் மலிங்க மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து கொண்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். உள்ளூர் கிரிக்கட் தொடரில் விளையாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் நாடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடுவதற்காக அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்றார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக முன்னதாக இடம்பெற்ற ஆட்டத்தில் லசித் மலிங்கவுக்குப் பதிலாக அல்ஜாரி ஜோசப் இடம்பிடித்திருந்தார். இதில் அல்ஜாரி ஜோசப் 12 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
மும்பைக்கு சென்றிருந்த மலிங்க, நேற்றைய போட்டி முடிந்த பின்னர் மீண்டும் இலங்கையில் நடக்க இருக்கும் இன்றைய போட்டியில் பங்கேற்பதற்காக விடியற்காலை மும்பையில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் அவர் காலி அணிக்காக விளையாடுகிறார். இன்றைய மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் கொழும்பு அணியும், காலி அணியும் தம்புள்ள ரன்கிரி மைதானத்தில் விளையாடி வருகின்றன.
நேற்றைய ஆட்டமொன்றில் கண்டி அணியும், தம்புள்ளை அணியும் விளையாடிய நிலையில், கண்டி அணி 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.