மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டது பாகிஸ்தான்!
In இந்தியா November 12, 2020 4:53 am GMT 0 Comments 1456 by : Krushnamoorthy Dushanthini

மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 2008ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 150 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரிவதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை மட்டும் சர்வதேச நெருக்கடிக்கு பயந்து பாகிஸ்தான் அரசு கைது செய்தது. இவரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐ.நா சபை சேர்த்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலை அந்நாட்டின் விசாரணை அமைப்பான எப்.ஐ.ஏ.இ வெளியிட்டுள்ளது. இதில் ஆயிரத்து 210 பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 11 பேர் மும்பை தாக்குதலுடன் தொடர்புடையவர்களாவர்.
இவர்கள் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு நிதி பொருள்இ சாதனங்கள் கொடுத்து உதவி செய்துள்ளதுடன் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.