முல்லைத்தீவில் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதி மக்கள் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான வீட்டுத் திட்டங்களை விரைவில் அமைத்துத் தரவேண்டும் எனக் கோரிய இப்போராட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இதன்போது வயோதிபர்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் என பல தரப்பினரும் அங்கு கூடியதோடு, பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மக்கள் கையளித்தனர்.
இவர்கள் தற்போது குடியிருக்கும் காணி ஒரு தனி நபருக்குச் சொந்தமானது எனவும் அதனால் இவர்களுக்கு அதே இடத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்க முடியாது எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த காணிகளை விடுத்து வேறு இடத்தில் காணிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட
-
துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தியின் பேச்சு, இந்திய நீதித்துறைக்கே களங்
-
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக ஆரம்ப
-
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 35 பேர் கைது செ
-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோ
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து இதுவரை ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடை
-
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 15இலட்சத்துக்கும் மே
-
கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீல
-
டுபாயில் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை போடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்