முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது!
In ஆசிரியர் தெரிவு December 18, 2020 2:33 am GMT 0 Comments 1415 by : Yuganthini
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவு மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு கோரிக்கை விடுத்தப்போதும் இதுவரை எந்ததொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என வலியுறுத்தியே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர் போராட்டத்தை மீனவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் இதன்போது கவலை வெளியிட்டனர்.
மேலும், இந்திய- இலங்கை அரசாங்கங்கள் உரிய வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தித் தருவமாறு முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் நேற்று பிரோரணை நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கெடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.