முஸ்லிம்களின் உடல்களை, தலைமன்னாரில் அடக்கம் செய்யும் திட்டம்: அமைச்சரவையில் ஆராய்வு
In இலங்கை November 17, 2020 4:54 am GMT 0 Comments 1741 by : Yuganthini

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை, தலைமன்னாரில் அடக்கம் செய்யும் திட்டம் தொடர்பாக அமைச்சரவை ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை, தகனம் செய்யும் செயற்பாட்டுக்கு சில அரசியல் கட்சிகள், பல அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தொடர்ந்து எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கொழும்பில் உள்ள முஸ்லிம் மையவாடியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டவேளை, பெரும்பாலான அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மேலும் குறித்த நடவடிக்கையினால், இனபதட்டம் ஏற்படலாம் என பல அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்தே தலைமன்னாரில் உடல்களை புதைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார நிபுணர்கள் குழுவொன்றிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பிட்ட குழுவினர் பரிந்துரை செய்தால் மாத்திரமே அரசாங்கம் தலைமன்னாரை பயன்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.