முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கம் நல்ல முடிவை அறிவிக்கும் – ஹக்கீம்
In இலங்கை November 13, 2020 7:59 am GMT 0 Comments 1384 by : Vithushagan

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் நல்ல முடிவை அறிவிக்கும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
”கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் நல்ல முடிவை அறிவிக்கும். நாடாளுமன்றம் இதற்கு உரிய தீர்வை முன்வைக்கும் என என நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த விவகாரம் நாட்டின் முஸ்லிம் சமூகத்தினருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
முஸ்லிம் சமுகத்தின் வேண்டுகோள்களை புறக்கணித்து சுகாதார அமைச்சு விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்படாத ஆதாரங்களின் அடிப்படையில் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் உடல்களை புதைப்பது என்பது முஸ்லிம் மக்களின் மதநம்பிக்கையின் முக்கியமான பகுதி” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.