மூன்றாம் தவணைக்கு முன்னர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
In இலங்கை November 21, 2020 10:13 am GMT 0 Comments 1521 by : Jeyachandran Vithushan

மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதன்படி அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு திட்டங்களை முன்னெடுக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலைகளில் நுளம்பு ஒழிப்பு பிரசாரங்களுக்கு உதவுமாறு அந்தந்த சுகாதார அலுவலர்களுக்கு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தரம் 6 முதல் 13 வரை, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.