மெக்ஸிகோவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீர் உடல் நலக் குறைவு!

மெக்ஸிகோவில் ஃபைஸர்- பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நியூவோ லியான் மாகாணத்தில் ஃபைஸர்- பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட 32 வயது பெண் மருத்துவருக்கு திடீரென வலிப்பும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் மருத்துவனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ‘என்செஃபலோமையலிடிஸ்’ எனப்படும் மூளை தண்டுவட அழற்சி ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, அந்த மருத்துவருக்கு ஒவ்வாமை குறைபாடு இருந்துள்ளது.
ஃபைஸர் தடுப்பூசியை தன்னார்வலர்களுக்குச் செலுத்தி சோதித்தபோது, யாருக்கும் ‘என்செஃபலோமையலிடிஸ்’ பாதிப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை என நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த விவகாரம் குறித்து ஃபைஸர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.