மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சகிப் அல் ஹசன் விளையாடுவார்: பங். கிரிக்கெட் சபை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், சகலதுறை வீரரான சகிப் அல் ஹசன் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், 5 ஓவர்களை வீசிய பின்னர், இடுப்பு வலிக்காரணமாக மைதானத்திலிருந்து ஓய்வறை திரும்பினார்.
இதனால் அவர் எதிர்வரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அவரது ஸ்கேன் முடிவுகளில் பெரிதளவான பாதிப்புகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் மருத்துவர் மன்சூர் ஹொசைன் கூறுகையில், ‘அவரது ஸ்கேன் அறிக்கை முற்றிலும் நன்றாக இருக்கிறது. கண்ணீர் இல்லை. எங்கள் பிசியோ ஜூலியன் அவரை மாலையில் பார்த்தார், முன்னேற்றம் உள்ளது. அவர் விரைவில் பயிற்சிக்கு திரும்புவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
அநேகமாக அவர் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கலாம், ஆனால் தற்போது நாம் பெற்றுள்ள ஸ்கேன் அறிக்கைகளை கருத்தில் கொண்டு முதல் டெஸ்டில் அவர் பங்கேற்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை’ என கூறினார்.
முன்னதாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதில் சகிப் அல் ஹசன் 56.5 சராசரியாக 113 ஓட்டங்களை குவித்ததோடு ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். போட்டித் தடைக்கு பின்னர் அவர் விளையாடிய முதல் போட்டியாக இது அமைந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, சட்டோகிராம் மைதானத்தில் பெப்ரவரி 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.