மேற்கு ஸ்கொட்லாந்தில் கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுவதால் அத்தியாவசியமற்ற கடைகள் திறப்பு!
In இங்கிலாந்து December 11, 2020 7:36 am GMT 0 Comments 1656 by : Anojkiyan

மேற்கு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ உட்பட பெரும்பகுதிகளில், மூன்று வாரங்களில் முதல் முறையாக அத்தியாவசியமற்ற கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
நாட்டின் கடுமையான முடக்கநிலை விதிகளின் கீழ் இருந்த 11 சபை பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் 06:00 மணி முதல் வாடிக்கையாளர்களை வரவேற்கின்றனர். ஆனால் விடுதிகள் மற்றும் உணவகங்கள் சனிக்கிழமை வரை மூடப்பட வேண்டியிருக்கும்.
கொவிட் கட்டுப்பாடுகளின் அடிப்படையில், குறித்த பகுதிகள் நான்காம் மட்டத்திலிருந்து மூன்றாம் நிலைக்கு நகரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் 20ஆம் திகதி முதல் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நான்கு நிலை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளனர்.
இன்வெர்க்ளைட், பால்கிர்க் மற்றும் அங்கஸ் ஆகிய மூன்று சபைகள், மூன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு நகருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.