மேல் மாகாண எல்லையைக் கடக்க முடியாதவாறு போக்குவரத்து கட்டுப்பாடுகளை பிறப்பிக்கவும் – PHI கோரிக்கை
In ஆசிரியர் தெரிவு December 24, 2020 7:37 am GMT 0 Comments 1441 by : Dhackshala

மேல் மாகாணத்தினுள் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவதால் புதுவருட காலத்தில் மாவட்ட எல்லையைக் கடப்பதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகளை பிறப்பிக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார பணிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மூன்று குழுக்கள் ஆபத்தான விபத்தில் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதை அவதானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுள் முதலாவதாக மேல் மாகாணத்தில் கடமையாற்றும் வேறு மாவட்ட ஊழியர்கள் எனவும் அவர்கள் இப்போதே அவர்களது வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக வேறு பகுதிகளில் இருந்து மேல் மாகாணத்திற்கு பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருபவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மூன்றாவதாக மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் தற்போது வேறு பகுதிகளுக்கு சுற்றுலாக்களை மேற்கொள்வதன் ஊடாகவும் அதிக அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.