மொடர்னா நிறுவன கொவிட்-19 தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி!

ஃபைஸர் கொவிட்-19 தடுப்பூசியைத் தொடர்ந்து மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது.
மொடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதால் அந்த தடுப்பூசி அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இதற்கு நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஃபைஸர் தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது மற்றொரு அமெரிக்க நிறுவனமான மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெறும்.
இந்த நடவடிக்கை கொரோனா தொற்று பரவலை குறைக்க முக்கியப்பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மொடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதால் அந்த தடுப்பூசி அமெரிக்கா, கனடா உள்பட பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.