மொன்டே கார்லோ டென்னிஸ் தொடர்: முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்
டென்னிஸ் உலகில் நூற்றாண்டுகள் பழமையான மொன்டே கார்லோ டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
ஆண்களுக்கே உரித்தான இத்தொடர், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்ட தொடராகவும் பார்க்கப்படுகின்றது.
செம் மண் தரையில் நடைபெறும் இத்தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு, ஆண்கள் இரட்டையர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இத்தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்,
ஆண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில், கனடாவின் டெனிஸ் ஷாபலோவ்வும் , ஜேர்மனியின் ஜோன் லெனார்ட் ஸ்ட்ரூஃப்பும் பலப்பரீட்சை நடத்தினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுத்தது. இதில், 7-5 என செட்டை டெனிஸ் ஷாபலோவ் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், சிறப்பாக விளையாடிய ஜோன் லெனார்ட் ஸ்ட்ரூஃப், 6-3 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் சூடுபிடித்தது. இதில் எவ்வித சவாலையும் எதிர்கொள்ளாத ஜோன் லெனார்ட் ஸ்ட்ரூஃப், 6-1 என செட்டைக் எளிதாக கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில், ஜோன் லெனார்ட் ஸ்ட்ரூஃப், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ்வை எதிர்கொள்ளவுள்ளார்.
……………..
ஆண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்று இன்னொரு போட்டியில், ஆர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேன், பிரித்தானியாவின் கெய்ல் எட்மண்ட்டை எதிர்கொண்டார்.
இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுத்த இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என கெய்ல் எட்மண்ட் கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், மீண்டெழுந்த டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேன், 6-3 என செட்டைக் கைப்பற்றி செட் கணக்கை சமநிலை செய்தார்.
இதனையடுத்து, விறுவிறுப்படைந்த மூன்றாவது செட்டில், எவ்வித நெருக்கடியையும் எதிர்கொள்ளாத டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேன், 6-1 என செட்டை எளிதாக கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
……………..
ஆண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்று மற்றொரு போட்டியில், ரஷ்யாவின் டானில் மெட்வெடேவ் , போர்த்துக்கலின் ஜோவோ சோஸாவுடன் மோதினார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டானில் மெட்வெடேவ் முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஜோவோ சோஸா, டானில் மெட்வெடேவ்வுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த நெருக்கடிகளை தவிடுபொடியாக்கிய டானில் மெட்வெடேவ், இரண்டாவது செட்டையும் 6-1 என எளிதாக கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில், டானில் மெட்வெடேவ், மோல்டோவாவின் ராடு அல்போட்டை எதிர்கொள்ளவுள்ளார்.
…………….
ஆண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்று போட்டியில், இத்தாலியின் பெஃபியோ போக்நினி , ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூபெலேவ்வுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை ஆண்ட்ரி ரூபெலேவ் 6-4 என கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், மீண்டெழுந்த பெஃபியோ போக்நினி, 7-5 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இருவரும் தலா ஒரு செட்டினை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது.
இதில், சிறப்பாக விளையாடிய பெஃபியோ போக்நினி, 6-4 என செட்டைக் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.