மோடிதான் இந்தியா என பா.ஜ.க. சித்தரிக்க முயல்கிறது: மாயாவதி குற்றச்சாட்டு
In இந்தியா April 5, 2019 4:18 am GMT 0 Comments 2641 by : Yuganthini

பிரதமர் நரேந்திர மோடிதான் இந்தியா என பா.ஜ.க. சித்தரிக்க முயல்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சுமத்தியுள்ளார்.
மாயாவதி, தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இராணுவமே இந்திய இராணுவமென உத்தர பிரதேச மாநில முதல்வர் ஆதித்ய நாத் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மாயாவதி மேற்கண்டவாறு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“’மோடி என்றால் இந்தியா, இந்தியா என்றால் மோடி’ என பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் சித்தரிக்கின்றனர்.
இதேவேளை காங்கிரஸும் தனது ஆட்சி காலத்தில் ‘இந்திரா என்றால் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா’ என சித்தரித்திருந்தது. தற்போது அதே தவறை பா.ஜ.க செய்து வருகின்றது.
இதனால் நாட்டின் ஜனநாயகமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே மக்கள், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் இத்தகையவர்களுக்கு சரியான பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்” என மாயாவதி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு
-
AstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை
-
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர
-
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்
-
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்
-
பருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறை
-
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள்