மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது ; ராகுல் காந்தி விமர்சனம்!
In இந்தியா February 12, 2021 5:39 am GMT 0 Comments 1194 by : Krushnamoorthy Dushanthini

பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எல்லை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ கிழக்கு லடாக் எல்லையில் உள்ள நிலவரம் தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். இப்போது நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார்.
பிங்கர்-4 பகுதி நமது பிராந்தியம். இப்போதுஇஅந்த பிங்கர்-4 பகுதியில் இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பிராந்தியத்தை பிரதமர் மோடி ஏன் சீனாவுக்கு விட்டுக்கொடுத்தார்?
சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால் பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார்.
இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் ஒரு கோழை அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது. அவர் நமது இராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார்.
இராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இவ்வாறு செய்வதை இந்தியாவில் உள்ள யாரும் அனுமதிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.