யாரை நம்பி மாற்றம் தேடுவது – தேர்தல் களம் குறித்து சேரன் கவலை!
In இந்தியா April 13, 2019 5:00 am GMT 0 Comments 2675 by : Krushnamoorthy Dushanthini

மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பியவர்களும் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிடாமல், தத்தம் பெருமைகளையே பேசுவதாக இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் பிரசார பணிகளை தீவிரப்படடுத்தியுள்ளன. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரம் குறித்து இயக்குனர் சேரன் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்த கருத்துக்களை அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்,
”அனைவரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணமே உள்ளனர். ஆனால் ஒருவரும் தீர்வை நோக்கி நகரவில்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே உள்ளன. யாரை நம்பி மாற்றம் தேடுவது. சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது.
மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும் தனித்து நிற்கும் கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளின் தலைவர்கள் கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விபரங்களை கூறாமல் தத்தம் பெருமைகளையே கூறுகின்றனர்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு
-
நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள