யாழிலும் மட்டு.விலும் சிறிசபாரத்தினம் அவர்களின் 33வது நினைவேந்தல் நிகழ்வு!
In இலங்கை May 5, 2019 1:46 pm GMT 0 Comments 2569 by : Jeyachandran Vithushan

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 33வது நினைவேந்தல் நிகழ்வு நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்க மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமாகிய கோவிந்தன் கருணாகரம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கட்சியின் பிரதித் தலைவரினால் சிறிசபாரத்தினம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றப்பட்டதுடன், வருகை தந்தோரினால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதேவேளை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 33வது நினைவேந்தல் நிகழ்வு யாழ் கோண்டாவில் அன்னங்க தோட்டவெளி பகுதியில் இடம்பெற்றது
சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பலரும் கலந்துகொண்டு சிறிசபாரத்தினம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்
-
மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக யாழ். மாவட்ட
-
நாட்டில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 180 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்திருப்பது கண்டனத
-
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக
-
நவம்பர் மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசிகள் போடும் பணிகளை நிறைவுசெய்யும் நோக்கில், தடுப்பூசி திட்டம
-
கொவிட்-19 தொற்றுநோய்களின் போது சில தம்பதிகள் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாக வரம்பிற்குள் தள்ளப்பட்ட ந
-
கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றிருந்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு இரண்டு வார
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு
-
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்