யாழில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது
In இலங்கை April 1, 2019 7:22 am GMT 0 Comments 3422 by : Dhackshala
மானிப்பாய் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து தந்தையையும் மகனையும் வாளினால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடுவில் பகுதியில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 21 வயதுடைய குறித்த இளைஞர் கைது செயயப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் புகுந்த கும்பலொன்று வீட்டில் இருந்த இளைஞன் மீதும் அவரது தந்தை மீதும் வாளினால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தை ஐந்து பேர் கொண்ட குழுவினரே மேற்கொண்டனர் என முறைப்பாட்டாளர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ