யாழில் ஐவருக்கு கொரோனா தொற்று: வவுனியாவில் மூவர்!
In ஆசிரியர் தெரிவு December 14, 2020 1:06 pm GMT 0 Comments 2184 by : Litharsan

யாழ். மருத்துவபீட ஆய்வு கூடத்தில் இன்று 98 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூரத்தி தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஏழாலை பகுதியில் மூவருக்கும் இணுவிலில் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியாவில் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்களிர் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்தவர் எனவும் ஏனைய இருவரும் வவுனியா திருநாவற்குளம் மற்றும் கற்குழியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடங்களில் செய்யப்பட்ட முடிவுகள் பின்னர் வெளியாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.