யாழில் கடை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்தில் ஒருவர் கைது!
In இலங்கை April 4, 2019 5:23 am GMT 0 Comments 2570 by : Jeyachandran Vithushan
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள கடை ஒன்றை உடைத்து சி.சி.ரி.வி. கமெராக்கள் மற்றும் அதனைப் பொருத்தும் சாதனங்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள பித்தளை, இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதனங்கள் கடந்த டிசெம்பர் மாதம் திருட்டுப் போயிருந்தன. எனினும் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு வழங்கப்படவில்லை.
யாழ். மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் செயற்படும் சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினர், கொட்டடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றுக் கைது செய்தனர். அவருடமிருந்து சி.சி.ரி.வி. கமெராக்கள் மற்றும் அதனைப் பொருத்தும் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
அவை தொடர்பாக சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் திருடப்பட்ட கடையின் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையே அடுத்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும்
-
ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிய
-
யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம்
-
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ
-
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி
-
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு
-
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)